அமேசான் நிறுவனம், இந்திய தேசியக்கொடி நிறத்தில் மிதியடி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய அரசின் எதிர்ப்பால், இணையதளத்திலிருந்து அந்தத் தயாரிப்புகளை அமேசான் நிறுவனம் நீக்கியுள்ளது.

அமேசான் நிறுவனம், தனது இணையதள வர்த்தகத்தில், இந்திய தேசிய கொடி நிறத்தில் மிதியடி விற்பனை செய்தது. இது குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக மிதியடிகளை தயாரித்த அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அந்தத் தயாரிப்புகள் அனைத்தையும் திரும்பப் பெறவேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிடில், அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு விசா வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அமேசான் நிறுவனம், இணையதளத்திலிருந்து அந்தத் தயாரிப்புகளை நீக்கியுள்ளது.

இதையும் படியுங்கள் : தேசியக்கொடியை மீண்டும் அவமதித்த மோடி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்