திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வரவேற்றுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இது குறித்த வழக்கில் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கூடுதல் மனுதாரராகி தொடுத்திருந்த துணை வழக்கில், திரையரங்ககளில் தேசிய கீதம் இசைக்கும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க கட்டாயப்படுத்தக் கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காமல் அவமதித்ததாகக் கூறி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகள் மீது பிற்போக்கு அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்நிலையில், இது குறித்து நிலுவையில் இருந்த வழக்கை முடித்து வைத்து நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவில், பொது இடங்களில் தேசிய கீதம் இசைக்கப்படும்போதும் பொதுவாக எழுந்து நின்று உரிய மரியாதை செலுத்த வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளபோதும் மாற்றுத்திறனாளிகளுக்கு விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஊனமுற்றோருக்கான தேசிய மேடை வரவேற்கிறது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை எண்ணம் வருகிறதா உங்களுக்கு ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்