தேசம் காப்போம்

நாடு காக்கும் பயணத்தில் இப்போதுவுடன் இணையுங்கள்

0
2670

ஒரு திருமணத்தைத் தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்கிறது; சிபிஐ நீதிபதி ஒருவரது சந்தேகத்துக்கிடமான மரணத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தயாரானபோது, அரசே போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்கிறது; தனது உணவுப் பழக்கத்துக்காக கொல்லப்பட்டவனுக்கு நீதி செய்ய வேண்டிய காவல் துறை, அவனது ஃப்ரிட்ஜில் இருந்தது மட்டனா, பீஃபா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது. பொய்களைப் பரப்பாதீர்கள் என்று ஆட்சியாளர்களிடம் துணிந்து சொல்ல வேண்டிய ஊடகங்களில் பலவும் மதவெறியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அறிவுஜீவிகள் எனப்படுகிறவர்களில் சிலர் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலுக்கு நியாயம் கற்பிக்க துணிகிறார்கள்.

நான்கு வருடங்களில் எட்டு கோடி வேலைகளை உருவாக்குவோம் என்று சொன்ன மோடி அரசு இரண்டு லட்சம் வேலைகளைக்கூட உருவாக்கவில்லை என்று தொழிலாளர் வாரியம் சுட்டிக் காட்டியுள்ளது; இளைஞர்கள் பக்கோடா விற்கலாமே; அதில் என்ன தப்பு என்கிறது பாரதிய ஜனதா கட்சி. நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அரசியல் செய்த காந்தியின் அகிம்சை கொள்கைக்கு நேர் எதிராக பிரிவினையையும் வன்முறையையும் அரசியல் உத்தியாக முன்வைக்கிறது பாரதிய ஜனதா கட்சி. கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிற மக்கள் நல அரசுக்கு ஆதரவான மனநிலைக்குத் தமிழ் நிலத்தில் வாழும் சமூகம் கடந்த ஒரு நூற்றாண்டில் தன்னைத் தயார் செய்துள்ளது.

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் தன் நிலத்தில் வாழும் சக உயிர்களாகக்கூட பாவிக்க முடியாத ஒரு சித்தாந்தம் இங்கு மக்கள் மத்தியில் நச்சைப் பரப்பி வருகிறது; அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் இந்த விஷக் கருத்துகளுக்கு இரையாகாமல் தடுக்கும் பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது; அறம் செறிந்த வாழ்வுக்குப் பழக்கப்பட்ட இந்தச் சமூகத்தில் அறநெறிகளைத் துச்சமென மதிக்கும் அந்த வெறுப்புச் சித்தாந்தத்தைப் பரப்பி வருகிறார்கள். இந்த வெறுப்பை அன்பாலும் துணிவாலும் வென்று காட்டுகிற இளம் சொந்தங்களைத் தயார் செய்யும் பெரும் பொறுப்பை காலம் நம் கைகளில் விட்டிருக்கிறது. மானுட சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் நீதியையும் நிலைநாட்டுகிற உரையாடல்கள், பரப்புரைகள், பாடல்கள், உண்மைக் கதைகள், குறும்படங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் என்கிற பெரும் பயணத்துக்குக் காலம் நம்மை அழைக்கிறது.

இந்த உலகை வெறுப்பிலிருந்து காக்கும் பெரும் பயணத்தில் இப்போது டாட் காம் சமரசமில்லாத, அதே சமயம் மிகைத்த அன்புடனான அகிம்சையான அணுகுமுறையை முன்வைக்கிறது; சதிகளும் ஆயுதங்களும் நிறைந்த வெறுப்பின் வழித்தடத்தில் நிராயுதபாணியாய் உண்மையையும் நம்பிக்கையையும் ஆயுதமாய் ஏந்தி முன்செல்கிறது இப்போது; இதயங்களையும் மனசுகளையும் பிளவுபடுத்துகிறவர்கள் மத்தியில் இதயங்களையும் மனசுகளையும் இணைக்கும் அழகிய பயணத்தில் இப்போது டாட் காமுடன் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அழைத்துப் பேச: +919445515340, வாட்ஸப் செய்ய +919884360505. இந்தப் பயணம் தேர்தலுக்கானதல்ல; அதையும் தாண்டி அம்பேத்கர் முன்மொழிந்த சமூக ஜனநாயகத்துக்கானது; மக்களுக்கு அதிகாரத்தைத் தருகிற வல்லமையுள்ள பயணம் இது. இணைந்து நன்மை செய்யுங்கள்; அதன் பிரதிபலன்களை நமது சமகாலத்திலும் நம் சந்ததிகளின் காலத்திலும் தொடர்ந்து காண முடியும்.

இப்போதுவின் #OvercomeOckhi முயற்சிக்கு உங்களால் ஆன உதவியைத் தொடர்ந்து வழங்குங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here