பாரதிய ஜனதா கட்சியின் சாதிய அணுகுமுறை தேசத்தின் மார்பில் குத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், அம்மாநில காவல்துறைக்கு ஆள்சேர்க்கும் பணி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அப்போது மருத்துவப் பரிசோதனக்காக வந்திருந்தவர்கள் மார்பில், சாதிப்பிரிவை குறிப்பிடும் வகையில் எஸ்.சி, எஸ்.டி, ஓ., (ஓபிசி) என எழுதப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியின் சாதிய அணுகுமுறை தேசத்தின் மார்பில் குத்தப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், மத்திய பிரதேசத்தின் இளஞர்களின் மார்பில் எஸ்.சி/எஸ்.டி என எழுதி நாட்டின் அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதுதான் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எண்ணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த சித்தாந்தத்தைத் தோற்கடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்