நயன்தாரா நடிப்பில் தமிழில் வெற்றி பெற்ற படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

இந்த வருடம் நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படம், இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்திருந்தனர். சின்ன வேடம் ஒன்றில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். த்ரில்லர் படமான இதனை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். படம் தமிழில் கமர்ஷியலாக வெற்றி பெற்றது.

இமைக்கா நொடிகளை தயாரிப்பாளர்கள் ராம்பாபு, கோபிநாத் இணைந்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். தெலுங்குப் படத்துக்கு அஞ்சலி விக்கிரமாதித்யா என்று நயன்தாராவின் கதாபாத்திரப் பெயரை வைத்துள்ளனர். தெலுங்குப்பட ரசிகர்களுக்கு மற்ற அனைவரையும்விட நயன்தாரா பரிட்சயமானவர் என்பதால் நயன்தாராவை முன்னிறுத்தி விளம்பரம் செய்கிறார்கள்.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here