இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தும் புதிய முயற்சியை வாட்ஸ்அப் துவங்கியுள்ளது. இதற்கென வாட்ஸ்அப் ஊழியர்கள் குழு இந்தியா வந்துள்ளது.

போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் நோக்கில் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.  
வாட்ஸ்அப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பிரச்சார வாகனம் மூலம் பொது மக்கள் கூடும் இடங்களில் சிறிய நாடகங்கள் மூலம் போலி செய்திகளை பரப்புவதால் ஏற்படும் ஆபத்தை விளக்கி வருகிறது. முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதியில் இந்த முயற்சியை மேற்கொண்டது .

போலி செய்திகளை கட்டுப்படுத்த ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளுக்கு மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கையில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது. ஜனவரி 2017 முதல் இதுவரை சுமார் 30 பேர் போலி செய்திகள் பரப்பப்படுவதால் கொல்லப்பட்டு இருப்பதாக இந்தியா ஸ்பென்ட் வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து இந்த நடவடிக்கையை துவங்கியுள்ளன. வாட்ஸ்அப் பிரச்சார திட்டத்தின் அங்கமாக ஜியோபோனில் எவ்வாறு வாட்ஸ்அப் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வழங்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here