தென்மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் மீது, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்துவரும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு புகார் கடிதம் சென்றுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில், உடனடியாக அவர் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எந்த மாநிலத்தின் ஆளுநர் என்பதைத்
தெரிவிக்கவில்லை.

கடந்த 2017ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் மீது அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்ததால், சண்முகநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here