தென் கொரியாவில் இருந்து மேலும் ஒருலட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகஅரசுபல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றை கண்டறியப்படுவதற்கு பி.சி.ஆர் உள்ளிட்ட கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கருவிகள் அனைத்தும் தென்கொரியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறன்றன. இதன்படி தற்போது கூடுதலான ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.

வாரம் ஒரு முறை இறக்குமதி என்ற அடிப்படையில் இதுவரையில் சுமார் 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் மொத்தம் தமிழக அரசு 10 லட்சம் பி.சிஆர் கருவிகளை ஆர்டர் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here