1. காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (இன்று) விடுமுறை அறிவிக்கப்பட்டது. முன்னதாக, தென் மாவட்டஙக்ளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

2. தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

3. கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதுரை கூடல்நகர் மற்றும் சிக்கந்தர்சாவடு பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், அடையாளம் தெரியாத நபர்கள் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

4. தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் வரும் ஜூன் மாதம் வரை மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

5. திருவாரூர் அருகே கடம்பக்குடியில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வழக்கில் பேராசியரியர் ஜெயராமன் உட்பட எட்டு பேரை விடுவித்து திருவாரூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்