இலங்கையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்க அணி அங்கு சென்றிருக்கிறது.

காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 20 ஆம் திகதி கொழும்புவில் ஆரம்பித்தது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் மகாராஜ் 9 விக்கெட் வீழ்த்தினார்.
214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 124 ரன்னில் சுருண்டது. தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஒட்டுமொத்தமாக 489 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. டி ப்ரூயின் 45 ரன்னுடனும், பவுமா 14 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

தென்ஆப்பிரிக்கா சார்பாக விளையாடிய டி ப்ரூயின் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றியது.

இலங்கை தொடக்க பேட்ஸ்மேன் கருணாரத்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

கடந்த 2006-இக்கு பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்