தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு குறுக்குவழியில் வகை செய்து விட்டது – வைகோ

0
160

ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு வழிவகை செய்துவிட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றசாட்டு.

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆய்வு மையம் தேர்வு செய்யும் என தெரிவித்திருந்தது.

ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது, அளவை மத்திய அரசே முடிவு செய்யும் என்றும் தேவைப்படும் ஆக்சிஜன் குறித்து சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம் எனவும் கூறியிருந்தது.

ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜனை மத்திய தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும் என கூறி, ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசே பிரித்துக்கொடுக்கும் எனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டியிருந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு குறுக்குவழியில் வகை செய்து விட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றசாட்டியுள்ளார். தமிழக அனைத்து கட்சிகளின் கோரிக்கையை நீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here