தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களைப் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் குமரெட்டியார்புரம் கிராம மக்கள் எம்.ஜி.ஆர் பூங்கா முன்பு, திங்கட்கிழமை (பிப்.12) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் முடிவு எட்டப்படாததால், போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (பிப்.13) நீடித்தது. இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பொதுமக்களைப் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்