தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் நேற்று (பிப்.12), குமரெட்டியாபுரம் கிராம மக்கள் எம்.ஜி.ஆர் பூங்கா முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

sterlite-1

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட அவர்கள் மறுத்துவிட்டனர். இந்தப் போராட்டம் நள்ளிரவிலும் தொடர்ந்தது.

sterlite-2

ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சுப் புகையால் பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தப் போராட்டம் இன்றும் (பிப்.13) தொடர்கிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்