தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் . போரட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 65 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார் .

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், வழக்கை முறையாக விசாரிக்காமல் 65 பேரையும் விடுவித்து விட்டார். எனவே அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த புதன்கிழமை (ஜூன் 20) இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டார். மேலும், 65 பேரிடமும் மாவட்ட நீதித்துறைற நடுவர் பெற்றற வாக்குமூலத்தை சமர்பிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் .

அதன்படி இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சரியான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்த நீதிபதி, ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here