தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களில் எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் குமரெட்டியார்புரம் கிராம மக்கள் எம்.ஜி.ஆர் பூங்கா முன்பு, திங்கட்கிழமை (பிப்.12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் முடிவு எட்டப்படாததால், போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (பிப்.13) நீடித்து வந்தநிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு பொதுமக்களைத் தூண்டியதாக எட்டு பேர் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து கைதான எட்டு பேரையும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்