தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்

0
291

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் , தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் விரிவான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது காவல்துறையின் நடவடிக்கையும், துப்பாக்கிச் சூடும், மனித உரிமைகளுக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது.

இது குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணையை உடனடியாக நடத்துமாறு இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த சம்பவத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ, அங்கு, நாட்டு மக்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும், போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தவும் முழு சுதந்திரம் அளிக்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்பதை அறிவுறுத்த வேண்டும்.

அதே போல, ஐக்கிய நாடுகள் சபை வகுத்துக் கொடுத்திருக்கும் வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கொள்கைகளின் அடிப்படையில், அனைத்து வர்த்தக நிறுவனங்களும், மனித உரிமைக்கு மரியாதை செலுத்த வேண்டியது அவசியம். மனித உரிமைகளை மதித்தல், போதிய பாதுகாப்பு போன்றவற்றை வர்த்தக நிறுவனங்கள் பின்பற்றியே ஆக வேண்டும்.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகளை மதிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும். தூத்துக்குடியில் மக்கள் அளித்திருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பூர்த்தி செய்து, இந்திய சுற்றுச்சூழல் சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here