தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சமூக விரோதிகளின் ஊடுருவல்தான் காரணம் – ரஜினிகாந்த்

0
389

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணம் சமூக விரோதிகளும், விஷக் கிருமிகளும்தான் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் –

பாதிக்கப்பட்ட எல்லோரையும் போய் பார்த்தேன் அதில் சிலபேர் மனு கொடுத்துள்ளார்கள், நிறைய பேர் பயந்திருக்கிறார்கள், நிறைய பேர் சோகத்தில் இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது இது மாதிரி சம்பவம் இனி நடக்கவே கூடாது என்று நினைக்கிறேன். நல்ல பிரச்சனைக்காக 100 நாள் போராட்டம் நடத்தினார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஆலை ஊழியர்கள் குடியிருப்புகளையும் எரித்தது சாமானிய மக்கள் இல்லை. தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் இத்தகைய அசம்பாவிதம் நடந்தது .

சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வைத்திருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எனவே, சமூக விரோதிகளை ஒடுக்க, இப்போது இருக்கும் தமிழக அரசு ஜெயலலிதா வழியை பின்பற்ற வேண்டும்.

தமிழகம் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. அனைத்திற்கும் போராட்டம் என்பது தீர்வாகாது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். சமூக விரோதிகளின் வசம் சிக்கி விடக்கூடாது. ஏதாவது பிரச்சனை என்றால் நீதிமன்றங்களை அணுக வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவலை கவனிக்க தவறியது உளவுத்துறையின் தோல்வி.

எல்லா பிரச்சனைக்கும் ராஜினாமா என்றால் மறுபடியும் என்ன நடக்கும்? மக்களின் சக்திக்கு முன்னால் எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை எந்த அரசு வந்தாலும் திறக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் சென்றால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் மனிதர்களே இல்லை.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை.இவ்வுளவு பெரிய சம்பவம் நடந்ததற்கு அரசின் அலட்சியம் தான் காரணம். அரசுக்கு இது பெரிய பாடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here