தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்

0
104

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, மறுநாள் ஒருவரும், காயமடைந்தவர்களில் ஒருவரும் உயிரிழந்தனர். 

இதுதொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வந்தது. இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு, விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைப்பு என தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக கூறி வழக்கை முடித்து வைத்தது. 

துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


 

dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here