தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் வார்த்தை கூட சொல்லாதது வெட்கக்கேடானது – முக ஸ்டாலின்

0
217

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் காவல்துறையை காவிமயமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாஜக ஆட்சியின் நான்காண்டுளில் பல சாதனைகளை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறாரே? என்ற கேள்விக்கு

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நான்காண்டு சாதனை என்று எடுத்துக் கொண்டால், தமிழ்நாடு இந்தியாவுக்குள் தான் இருக்கிறது. இந்தியாவின் பிரதமர் தான் மோடி. ஆனால், ஒருவேளை ஏதேனும் வெளிநாட்டுக்கு அவர் பிரதமராக இருக்கிறாரோ இன்றைக்கு எனக்கு சந்தேகம் வந்திருக்கிறது. காரணம், இந்தியாவில் இருக்கின்ற தமிழ்நாட்டில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஏறக்குறைய 13 பேர் இறந்திருக்கிறார்கள். சுமார் 50 முதல் 60 பேர் வரை படுகாயம் அடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நியாயமாக, பிரதமர் மோடி அவர்களே நேரில் வந்திருக்க வேண்டும் அல்லது மத்திய அமைச்சர்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதுவுமில்லை என்ற நிலையில், ஒரு பிரதமர் அந்த மக்களுக்கு ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை என்பதுதான் வெட்கக்கேடானது, வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது என்று கூறினார் .

மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று சந்தித்தது கபடநாடகம். காவல்துறையை காவிமயமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகுவதே தமிழக மக்களுக்கு பாதுகாப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்