தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திற்குச் சொந்தமான 36 புள்ளி 81 ஹெக்டேர் நிலத்தில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க இடைக்கால தடைவிதிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, தூத்துக்குடியை சேர்ந்த பாலசிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உயர்நீதிமன்ற

மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தூத்துக்குடி துறைமுக நகர், கோயில்பிள்ளை நகர், முத்துநகர், ஒத்தவீடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையம் அமைப்பதற்காக உள்ள விதிகள் பலவற்றையும் மீறி, தனியார் அனல் மின் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here