தூத்துக்குடியில் கலவரத்தைத் தூண்டியதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது

0
605

தூத்துக்குடியில் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை விமான நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேந்த வாஞ்சிநாதன் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் துத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராகவும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

வழக்கில் வாஞ்சிநாதனுக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது . தூத்துக்குடி போராட்டத்துக்கு சட்ட ஆலோசகராக செயல்பட்டவர் வாஞ்சிநாதன் .

இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நீக்கம் தொடர்பான வழக்கில் டெல்லி சென்று வாதிட்டபின், விமானத்தில் சென்னை திரும்பியுள்ளார். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடியில் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு தூத்துக்குடி போலீஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here