தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு , இளைஞர் உயிரிழப்பு, பலர் காயம்

0
284

தூத்துக்குடி அண்ணாநகரில் போலீஸார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர் .

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது . தூத்துக்குடி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 144 தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை (செவ்வாய்க்கிழமை) மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அப்போது போலீஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15 பேர் உயிரிழந்தனர் . பலர் காயமடைந்தனர் .

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்