தும்ஹரி சுலு ரீமேக்… ஜோதிகாவின் கணவராக விதார்த்

0
198
Jyothika

வித்யா பாலன் நடிப்பில் வெளியான இந்திப் படம் தும்ஹரி சுலுவின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடிக்கிறார்.

இந்தியில் வெற்றி பெற்ற தும்ஹரி சுலு படத்தை ராதாமோகன் தமிழில் ரீமேக் செய்கிறார். வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். வித்யா பாலன் எனக்கு விருப்பமான நடிகை, அவர் நடித்த வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி, பெருமை என்று ஜோதிகா கூறியிருந்தார். இதுவொரு நாயகி மையப்படம்.

தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவின் கணவராக நடிக்க விதார்த்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். தனி ஹீரோவாக நடித்துவரும் விதார்த் நாயகி மையப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஆச்சரியம். ஹீரோயிசம் பார்க்காத நடிகரை தேடியபோது விதார்த் சரியாக இருப்பார் என்பதாலேயே அவரை தேர்வு செய்தோம் என ராதாமோகன் கூறினார்.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்: “அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம்…

இதையும் படியுங்கள்: மனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்