துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்திய அமைச்சராகவுள்ள வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாகவுள்ள ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைதொடர்ந்து இப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், இப்பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 18ஆம் தேதி (நாளை) முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு மீதான பரிசீலனை ஜூலை 19ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுவினைத் திரும்பப் பெற கடைசி தேதி ஜூலை 21 என்றும் அறிவிக்கப்படுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1. ஜூலை 1, 1949ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார்.

2. வெங்கையா நாயுடு பி.ஏ. பி.எல் பட்டம் பெற்றுள்ளார். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.

3. 1977-80 வரை ஆந்திர மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்துள்ளார். மேலும், 19878-85 வரை இரண்டு முறை ஆந்திர மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

4. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர், தேசியத் தலைவர், தேசிய பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.

5. தற்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக உள்ளார்.

இதையும் படியுங்கள் : எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி போட்டி?; 5 தகவல்கள்

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்