புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு நாடுகள் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

தற்போது வியட்நாமில் 2 நாட்கள் மாநாட்டில் பங்கேற்றுவரும் பாம்பியோ, வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

”தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக பிப்ரவரி 26 ஆம் தேதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வராஜுன் தொலைப்பேசியில் பேசினேன். பிராந்தியத்தில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்தோம்.

மேலும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஷியிடமும் தொலைப்பேசியில் பேசினேன். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் செயல்பட்டு, ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பதற்றத்தை எந்தவகையிலும் தணிக்கும் வகையில் இரு நாடுகளும் செயல்படத் தேவையான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம் என இரு நாட்டு அமைச்சர்களிடம் நான் பேசினேன். இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை தவிர்த்துவிட்டு, நேரடியாக கலந்துரையாடி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை கொண்டு வர வேண்டும் என இரு நாடுகளின் மந்திரிகளிடமும் வலியுறுத்தி உள்ளேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியா தனது சுயபாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை இருக்கிறது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத குழுக்களை அழிக்க அமெரிக்கா, இந்தியா இணைந்து செயல்படும் ” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் பிறக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here