ஆதார் வழக்கில் தீர்ப்பும் வரை, அதனை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி, ரயில் டிக்கெட் முன்பதிவு, பள்ளி மதிய உணவுத் திட்டம், ஏழைப் பெண்களுக்கான இலவச சமையல் எரிவாயுத் திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம், புதிய வாகனங்களுக்கானப் பதிவுகள் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எணை மத்திய அரசு கட்டாயமாக்கியது. மேலும் வங்கிக் கணக்கு, செல்போன் சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, வங்கிக் கணக்கு, செல்போன் சேவை உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here