நீண்ட நாட்களாக தீராத மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு இந்த கசாயம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப் பாருங்களேன். 

தேவையான பொருட்கள்

கொடிப் பசலைக் கீரை   –  ஒரு கைப்பிடி

கொத்தமல்லி விதை (தனியா)  –  5 கிராம்

சீரகம்  –  ஒரு ஸ்பூன்

செய்முறை

முதலில் கொடிப்பசலைக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்து நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி  அதில் ஆய்ந்து வைத்துள்ள  கீரையையும் , தனியா மற்றும் சீரகத்தையும் சேர்த்து   நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்த பின்பு அதனை பாதியளவாகச்(150 மி.லி) சுண்ட வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் தீராத மலச் சிக்கலை போக்க உதவும் கசாயம்.

மலச்சிக்கலால்  அவதிப்படுபவர்கள் தினமும் காலை வேளையில் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தீராத மலச்சிக்கல்  தீரும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

Courtesy: dinamani


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here