தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாடுகளில் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 14.11.2020 அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை வாழ் மக்கள் தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்கு சென்று பொருட்களை வாங்கிட ஏதுவாக வார இறுதி நாட்களான 24.10.2020 முதல் 26.10.2020 வரை, 31.10.2020, 01.11.2020 மற்றும் 07.11.2020, 08.11.2020 உள்ளிட்ட ஏழு நாட்களுக்கு மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில், 25 வழித்தடங்களில், 50 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் அட்டவணையில் உள்ளவாறு இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இப்பேருந்துகளை எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக பேருந்தின் முகப்பில் ‘Deepavali Shopping Special’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சிறப்பு பேருந்துகள் விவரம்:

தி.நகர் – திருப்போரூர் – 3 பேருந்துகள்.

பெசன்ட் நகர் – வில்லிவாக்கம் – 1

வள்ளலார் நகர் – செங்குன்றம் – 2

ஆவடி – பிராட்வே – 2

தி.நகர் – பூந்தமல்லி – 2

பிராட்வே – செங்குன்றம் – 1

தாம்பரம் – செங்கல்பட்டு – 2

தி.நகர் – ஜெ.ஜெ.நகர் கிழக்கு – 2

தி.நகர் – அம்பத்தூர் ஓ.டி – 2

பிராட்வே – தாம்பரம் மேற்கு – 2

தி.நகர் – செம்மஞ்சேரி SCB – 2

அயனாவரம் – பெசன்ட் நகர் – 1

உயர்நீதிமன்றம் – கே.கே.டி.நகர் – 2

வள்ளலார் நகர் – ஐயப்பன் தாங்கல் – 2

எம்,கே.பி நகர் – எம்.ஜி.ஆர் கோயம்பேடு – 2

வில்லிவாக்கம் – திருவான்மியூர் – 2

திருவொற்றியூர் – பிராட்வே – 2

தி,நகர் – தாம்பரம் மேற்கு – 4

பிராட்வே – மணலி – 2

தி.நகர் – திருவேற்காடு – 3

பிராட்வே – கூடுவாஞ்சேரி – 1

தி.நகர் – கூடுவாஞ்சேரி – 1

தி.நகர் – எம்.ஜி,ஆர் கோயம்பேடு – 2

தி.நகர் – திருவான்மியூர் – 2

தி.நகர் – தாம்பரம் மேற்கு – 3 பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here