நாட்டின் தலைநகர் டெல்லி தீபாவளி கொண்டாட்டங்களின் பின் அங்கு காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது.

நேற்று தீபாவளி பண்டிகை டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதனால் காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது.

Dra1y_6UcAASzL5

இன்று காலை நிலவரப்படி டெல்லி ஆனந்த் விஹாரில் 999, அமெரிக்க தூதரக பகுதி மற்றும் சாணக்யபுரி பகுதியில் 459, மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் 999 என அபாயகரமான அளவில் காற்றின் தன்மை இருந்தது.

காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காற்றின் தரக்குறியீடு மிக மோசம் என்ற அளவில், 345 என்ற அளவிற்கு மாசு அதிகரித்தது.

டெல்லியில் இன்று காலையில் சாலைகள் தெரியாத அளவிற்கு புகை மூடியிருந்தது. புகைமூட்டம் அடர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here