தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி ; இந்தச் சுவர் இன்னும் எத்தனை உயிர்களைப் பழி வாங்குமோ?-பிரபல இயக்குநர் கேள்வி

0
1089

 இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? என்று ரஜினிநடித்த ‘பேட்ட’ பட இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் திங்களன்று சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகளுக்குப் பின் 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் அமைந்துள்ள நடூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் பகுதியில் கூலித் தொழிலாளர் குடும்பங்கள் குடியிருக்கின்றன. சுமார் 50 வீடுகள் இந்தப் பகுதியில் உள்ளன.

இறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட சுற்றுச்சுவர் தீணடாமை பாகுபாடு காரணமாக கட்டப்பட்ட சுவர் என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. 

இது குறித்து  ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தின்  இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்நிலையில் இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here