தி.மு.க ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்துகிறது; நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைக்கக் கூடாது என்று அனைத்தையும் செய்கிறார்கள் – சீமான்

0
291

சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மகாகவி பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘கொடநாடு விவகாரத்தில் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை. அவர்மீது வைக்கப்படும் விமர்சனம் உண்மையில்லையென்றால் அவர் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. நாம் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் தேசிய அரசியல் வெல்கிறது என்ற திமிரோடு இருக்கிறேன்.

தி.மு.க ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்துகிறது என்று பெருமிதம் இருக்கிறது. நாம் சொன்னதும், நாங்கள் எழுதியதும்தான் நடக்கிறது. நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைக்கக் கூடாது என்று அனைத்தையும் செய்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். இந்திய மொழிகளின் தொன்மையை தமிழிலிருந்து அறியலாம் என்று பிரதமர் மோடியே சொல்லியிருந்தார். கீழடியையே இவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்லிவந்தார்கள்.

தற்போது தமிழர் நாகரிகம் என்று சொல்கின்றனர். தொல்லியல்துறை குறித்த ஆய்வுகளை நடத்துவது வரவேற்புக்குரியது. ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்த வேண்டும். 1,200 ஆண்டுகளுக்கு முன்பு, கன்னடம், தெலுங்கு கிடையாது. 500 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் கிடையாது. சம்ஸ்கிருதத்தை மென்று உமிழந்த மொழிகள்தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம். அதைத்தான் கால்டுவெல்லும் திராவிட மொழிக் குடும்பம் என்கிறார்.

எங்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்துவது வேதனை தருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? திப்பு சுல்தான் சுதந்திரத்துக்காகப் போராடினார். திப்பு சுல்தான் தான் தீரன் சின்னமலைக்கும், வேலுநாச்சியாருக்கும் உதவினார். ஆர்.எஸ்.எஸ் எப்போது சுதந்திரத்துக்காகப் போராடியது. 

நல்லக்கண்ணு சுதந்திரத்துக்காகப் போராடினார். பகத்சிங் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்காமல் உயிர்நீத்தார். 110 விதியின் கீழ் வெளியிடப்படுவது வெறும் அறிவிப்புகள்தான். தமிழ் தேசியம் என்றால் சாதி வந்துவிடுகிறது என்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் ஆட்சியிலிருந்து சாதியை ஏன் ஒழிக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை என்பதுதான் எங்களது கோட்பாடு. என் ஆட்சி நடைபெறுகிறதா? தி.மு.க ஆட்சி நடைபெறுகிறதா என்று தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here