திவாலான பிஎம்சி வங்கி ; மோசடியை மறைக்க 21,000 போலிக் கணக்குகளைத் துவக்கிய வங்கி; வெளியான அதிர்ச்சி தகவல்

These loans were not recorded in core banking system, instead they were mere entries in the "master indent" submitted to the RBI for inspection, the EOW said

0
539

மகாராஷ்டிராவில் பிஎம்சி (பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி)  வங்கியில் நடைபெற்ற மோசடி புகார்கள் தொடர்பாக, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார குற்றங்கள் பிரிவின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினார்கள் . 

 பிஎம்சி வங்கிக் கிளை, எச்டிஐஎல் குழுமத்தின் 44 வங்கிக் கணக்குகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 21 ஆயிரம் போலி கணக்குகளை உருவாக்கி அந்த கணக்குகளில் கடன் கொடுத்து வாராக்கடனாக மாறியதாக மோசடியை திசை திருப்ப முயற்சித்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது. 

இந்த வழக்கில், அந்த வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் மும்பையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். முன்னதாக விசாரணைக்காக காவல்துறை தலைமையகத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார். விசாரணையின் முடிவில் அவரைக் கைது செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வங்கியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வின்போது தெரிய வந்ததையடுத்து, வங்கியின் செயல்பாடுகளுக்கு  பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

வங்கியில் நடந்த முறைகேட்டை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது .  கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ரூ. 4, 355 கோடி அளவில் வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்காக, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.

பிஎம்சி  வங்கி மோசடி தொடர்பாக, வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் ஆகியோருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அதை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு எதிரான கூடுதல் ஆதாரங்களைத் தேடுவதற்காக 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று பொருளாதார குற்றங்கள் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் வதாவன் மற்றும் அவரது மகன் சாரங் ஆகியோரை மும்பை காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு வியாழக்கிழமை கைது செய்தது. அவர்கள், மும்பை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அதையடுத்து, அவர்கள் இருவரையும் வரும் 9-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 3,500 கோடி மதிப்புடைய சொத்துகளை சிறப்பு புலனாய்வு குழு பறிமுதல் செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here