காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கலாய்த்து அவர்மீது கடுமையான குற்றம்சாட்டுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன் சேவைகளை அளிக்கும் முன்னணி நிறுவனமான “இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீசிங் அண்ட் ஃபினான்சியல் சர்வீசஸ் (ஐஎல் அண்ட் எஃப்எஸ்)’ ( Infrastructure Leasing & Financial Services IL&FS )லிமிடெட் திவாலாகும் சூழலில் இருப்பதால், அதற்குத் தேவையான நிதியுதவியை அளிக்குமாறு எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கியை மத்திய அரசு நிர்பந்தித்து வருகிறது .

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்

லைட்ஸ், கேமிரா, ஸ்கேம்(மோசடி).2007-இல், மோடி குஜராத் முதல்வராக இருந்த போது ரூ.70,000 கோடி மதிப்பிலான ‘பரிசு நகரம்’ திட்டத்தை ஐஎல் அண்ட் எஃப்எஸ் (IL&FS )நிறுவனத்துக்கு வழங்கினார். தற்போது வரைக்கும் அங்கு ஒரு வேலையும் நடக்கவில்லை. மோசடி வெளிவந்துவிட்டது. 2018 இல் , எல்ஐசி, எஸ்பிஐ இல் இருந்து ரூ.91,000 கோடி மூலம் ஐஎல் அண்ட் எஃப்எஸ் (IL&FS) நிறுவனத்தை மீட்க பிரதமர் முயற்சித்து வருகிறார். நாட்டின் பாதுகாவலர் மாட்டிக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு டிவீட்டில் மோடி அவர்களே, உங்களுடைய தனியார் நிறுவனம் ஐஎல் அண்ட் எஃப்எஸ் (IL&FS )திவாலாக போகிறது. அதனை எல்ஐசி பணம் மூலம் காப்பாற்ற விரும்புகிறீர்கள். இந்தியாவில் நம்பிக்கையின் அடையாளமாக எல்ஐசி திகழ்கிறது. எல்ஐசி திட்டத்துக்காக மக்கள் சிறிய தொகைகளை சேமித்து வருகின்றனர். அவர்களுடைய பணத்தில் இருந்து மோசடியாளர்களை காப்பாற்ற ஏன் விரும்புகிறீர்கள். ஐஎல்எஃப்எஸ் என்றால் உங்களுக்கு ஐ லவ் ஃபினான்ஷியல் ஸ்கேமா? (IL&FS – I Love Financial Scams) (நிதி மோசடி மீது காதலா உங்களுக்கு)” என்றும் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சஞ்சய் நிருபம் சனிக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 3 ஆண்டுகளில் “ஐஎல் அண்ட் எஃப்எஸ்’ நிறுவனத்தின் லாப விகிதம் 900 சதவீதம் சரிந்து பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திவாலாவதில் இருந்து அந்நிறுவனத்தை மீட்க எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கியிடம் நிதியுதவி அளிக்குமாறு நிர்பந்திக்கக் கூடாது.

சாமானிய மக்களாக உள்ள எல்ஐசி பாலிசிதாரர்கள், எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்து ‘ஐஎல் அண்ட் எஃப்எஸ்’ நிறுவனத்துக்கு அளிக்குமாறு மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது எந்த வகையில் நியாயம்?” என்று சஞ்சய் நிருபம் கேள்வி எழுப்பியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here