திவாலாகி இருந்த ருச்சி நிறுவனத்தை ரூ4350 கோடிக்கு வாங்கிய பதஞ்சலி நிறுவனம்

0
309

யோகா குரு ராம்தேவ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம் சமையல் எண்ணெய் மற்றும் சோயா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ருச்சி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை 4,350 கோடிக்கு வாங்க நிறுவனங்களின் இந்திய  நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

திவால் நடவடிக்கை உட்படுத்தப்பட்ட கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் ருச்சி சோயா நிறுவனத்தை, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கையகப்படுத்த, பாதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் கடனாளிகளுக்கு (வங்கிகளுக்கு)  செலுத்த வேண்டிய தொகையான 3,483 கோடி ரூபாயை செலுத்தும்  என்றும் கூறியுள்ளது.

மேலும் மும்பையின் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், தனது அறிக்கையில், பதஞ்சலியின் 4,350 கோடி ரூபாய் தீர்மானத் திட்டத்திற்கு ஏலதாரர், சில மாற்றங்களுடன் ஒப்புக் கொண்டார் என்றும், செப்டம்பர் 6ஆம் தேதியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பதஞ்சலி குழுமத்தின் மற்றுமொரு நிறுவனமான Patanjali Consortium Adhigrahan Pvt )பதஞ்சலி அதிகாரிகன் பிரைவேட் லிமிட் -பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் மற்றும் மூன்று பிற நிறுவனங்களின்  முயற்சியில் ருச்சி சோயா நிறுவனத்தை இணைக்கும் அறிக்கையை பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ளது. 

பதஞ்சலி குழுமத்தின்  பங்குதாரர்கள் ருச்சி சோயாவின் பங்கை பெறுவார்கள். ருச்சி சோயாவிற்கு கடன் வழங்கியவர்கள் ரூ. 4,240 கோடி திரும்ப பெற்றுள்ளனர். 65 சதவீதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. கடன் ரூ. 12,100 கோடி என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 110 கோடி ருச்சி சோயாவின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும். 

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த நிறுவனம், வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. இந்த நிலையிலேயே கடந்த 2017ல் இந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்த ஸ்டார்டர்ட் சார்டர்ட் பேங்க் மற்றும் டி.பிஎஸ் பேங்க் ஆகியவை இந்த நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தும் படி தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் மனு தாக்கல் செய்தன.

நிதி நெருக்கடியில் சிக்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டு ஏலத்துக்கு வந்துள்ள ருச்சி சோயா நிறுவனத்தை அதானி வில்மர் குழுமம் ஏலம் கேட்டபோது  யோக குரு ராம்தேவ் உருவாக்கிய பதஞ்சலி நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இது தொடர்பாக ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடன் அளித்த நிறுவன குழுவுக்கு (சிஓசி) பதஞ்சலி கடிதம் எழுதியது. அதில் அதானி வில்மர் நிறுவனத்துக்கு ஏலம் கேட்பதற்கான தகுதி குறித்து கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக ஜூன் 10-ஆம் தேதி சிஓசி-க்கு கடிதம் எழுதியுள்ளதாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே. திஜாரவாலா தெரிவித்திருந்தார்

திவால் சட்ட விதி 29ஏ பிரிவின் கீழ் சில கேள்விகளை அக்கடிதத்தில் எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது.இதனிடையே ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள் ஏலம் கேட்ட இரு நிறுவனங்கள் (அதானி வில்மர் மற்றும் பதஞ்சலி) குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

திவால் சட்ட விதி 29-ஏ பிரிவின் கீழ், திவாலான நிறுவனத்தை வாங்க விண்ணப்பிக்கும் நிறுவனத்துக்கு சில குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டும். இதன்படி ஏலம் கேட்கும் நிறுவனத்துக்குக தீர்வு குறித்த விதி முறைகளை தெரிவிக்கக் கூடாது என்பதாகும். அதே சமயம் ஏலம் கேட்கும் நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர் எவரும் வேறு எந்த நலிவடைந்த நிறுவனத்துடனும் தொடர்புடையவராக இருத்தல் கூடாது என்பதும் விதியாகும்.

திவால் நடைமுறை விதியின்கீழ் ருச்சி சோயா 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் விண்ணப்பித்தது. இந்நிறுவனம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 10,400 கோடியாகும்.

ருச்சி சோயா நிறுவனத்தை ஏலம் கேட்ட அதானி வில்மரின் நிர்வாக இயக்குநர் பிரணவ் அதானி. இவர் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியின் உறவினராவார். இவரது மனைவி நம்ரதாவின் தந்தை விக்ரம் கோத்தாரி. இவரது நிறுவனம் ரோட்டோமேக். இந்நிறுவனம் பாங்க் ஆப் பரோடா நிதி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் விக்ரம் கோத்தாரியை சிபிஐ அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.

ஜூன் 6-ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிறப்பித்த திவால் மசோதா அவசர சட்டத்தின்படி ஏலம் கேட்பவரின் உறவினர் எவரும் மற்றொரு பிரச்சினைக்குரிய நிறுவனத்தில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடாது என்பதாகும். இருப்பினும் இரு நிறுவனங்களும் அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே ஏலத்துக்கு விண்ணப்பித்துவிட்டன. 

ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here