மத்திய அரசால் புதிதாக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பில் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் புதிய இடமாக, திருவாரூர் மாவட்டத்தின் திருக்காரவாசல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஏஎல்பி-1 என்ற பிரிவின் கீழ் 55 வட்டாரங்களுக்கான ஏலம் டிஜிஎச் (ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம்) சார்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் விடப்பட்டது. இதில் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் 2 வட்டாரங்கள் உள்ளன.

இந்நிலையில் ஓஏஎல்பி-2 என்ற பிரிவின் கீழ் மேலும் 14 வட்டாரங்களுக்கான ஏல அறிவிப்பு ஜனவரி 7-ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் 494.19 சதுர கி.மீ. பரப்பளவில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அமைந்துள்ளது. கஜா புயலால் அண்மையில் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன.

ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த ஆண்டு 55 வட்டாரங் களுக்கான ஏலம் விடப்பட்டதில் மிக அதிக அளவாக வேதாந்தா நிறுவனம் 41 இடங்களை ஏலம் எடுத்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் இந்த நிறுவனம், தமிழகத்தில் 2 இடங்களை ஏலம் எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்