திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததால் கடந்த 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

திருவாரூரில் பள்ளிக்கு சென்று வந்த மாணவர்களில் 19 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்ச எண்ணிக்கையில்
எடமேலையூர் அரசு பள்ளியில் 13, தலைக்காடு 1, அடியக்கமங்கலம் 1, அரித்துவாரமங்கலம் 2, முனால்கோட்டை 2 என மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் அனைவரும் மருத்துவத்துறை அலுவலர்களின் அறிவரையின்படி தனிமைப்படுத்தபட்டுள்ளனர். அவர்களோடு உடனிருந்த மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here