திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கெதிராக போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓ.என்.சி.ஜி. நிறுவனம், ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. ஓ.என்.சி.ஜி. நிறுவனத்தின் இந்த பணிகளால், அங்குள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், எண்ணெயை எடுத்துச் செல்லும் குழாய்கள் உடைந்து நிலங்கள் பாதிப்படைவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், திருவாரூர் அருகே கடம்பக்குடியில், ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உட்பட 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்