திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து இன்று தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார்.

மக்களவை தேர்தல் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாசன் நகர், வடக்கு வடம்போக்கித் தெரு, பிடாரி தெரு உள்ளிட்ட இடங்களில் நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். மேலும் திருவாரூரில் நடைபெறும் பொது கூட்டத்திலும், தஞ்சை திலகர் திடல் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசுகிறார்.

இதனை தொடர்ந்து நாளை பெரம்பலூரிலும், 22 ஆம் தேதி சேலத்திலும், அதைத்தொடர்ந்து தருமபுரியில் உள்ள ஒடசல்பட்டி பகுதியில் நடைபெறும் பொது கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசுகிறார்.

இதன்பின் 23 ஆம் தேதி அரூர் மற்றும் திருவண்ணாமலை பொது கூட்டங்களில் பேசும் ஸ்டாலின், 24 ஆம் தேதி வட சென்னை, 25 ஆம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here