திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை. கூலித் தொழிலாளியான இவரை, வனத்துறையினர் தாக்கியதாகவும், இதில் அவர், உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனைத்தொடர்ந்து அங்கு பணியிலிருந்த வனத்துறை ஊழியர் தாண்டவராயன் என்பவரைச் சிறைபிடித்த அப்பகுதி மக்கள், அவரைச் சராமரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தினர்.

இதனிடையே, படுகாயமுற்ற வனத்துறை ஊழியர் தாண்டவராயனை காவல்துறையினர் மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திருமலையின் சடலம் மீட்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு, பிரதேச பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து செங்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: டெங்குவா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ அவசர நிலையை ஏன் அறிவிக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்