திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகையிட முயன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். .

கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று, சென்னை கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஒன்றுகூடிய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன், இளமாறன், அருண் உள்ளிட்ட 17 பேர் மீது, தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகிய நால்வர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் திருமுருகன் காந்தி மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் பேரணி நடத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்ற அவர்களைக், காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதையும் படியுங்கள் : லவ்வுன்னு சொல்லி திருநங்கைகளை ஏமாத்துறாங்க

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்