திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் இன்று(திங்கள்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதையொட்டி திருமலை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. திருமலையும் முழுமையும் பூலோக வைகுண்டம் போல காட்சியளிக்கிறது.

ஆந்திரமுதல்வர்பிரமோற்சவவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும்,ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சார்த்துகிறார். 9 நாட்கள் நடைபெறும் விழாவின் போது, இரு வேளைகளில் நான்கு மாட வீதிகள் வழியாக பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கருடசேவை அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு, இந்த முறை திருமலையில் முதல் முறையாக அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருப்பது பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

திருமலை திருப்பதியில் பிரமோற்சவ விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பக்தர்களின் பொருட்கள் திருடுபோவதை தடுப்பதற்காக 24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திருமலையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here