தன்னைக் காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய இருந்த காதலரை முன்னாள் காதலி ஒருவர் திருமண மண்டபத்தில் வைத்து துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் : சிபிஐ சோதனை: விஜயதரணி சொல்லும் காரணம் என்ன?

இந்த காட்சி பாலிவுட் சினிமாவில் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால் இச்சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அசோக் யாதவ் என்பவர் அங்குள்ள மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை பார்த்துள்ளார். அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் அசோக் யாதவும் காதலித்துள்ளனர். இந்நிலையில், திடீரென அசோக் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 மாணவர்கள் தற்கொலை

இதனையடுத்து திங்கட்கிழமையன்று ஹமிர்பூரில் அசோக்கின் திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமண மண்டபத்திற்கு வந்த அசோக்கின் முன்னாள் காதலி அசோக் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி நியாயம் கேட்டுள்ளார். மேலும், தான் கொண்டுவந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அசோக்கை கடத்திச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் அசோக் மற்றும் அப்பெண் இருவரும் சேர்ந்து நாடகம் நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து அசோக்கின் சகோதரர் மற்றும் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்