திருமணத்துக்கு மறுத்த நடிகைக்குக் கத்திக் குத்து: தயாரிப்பாளர் கைது

popular TV serial actress Malvi Malhotra was stabbed thrice by an individual for reportedly rejecting his marriage proposal.

0
107

மும்பையில் இந்தி டி.வி சீரியல் நடிகை மால்வி மல்ஹோத்ரா திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்ததால் அவரைக் தயாரிப்பாளர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

’உடான்’ என்கிற தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் மால்வி. ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குமார் மஹிபால் சிங் என்கிற தயாரிப்பாளர், சமூக ஊடகத்தில் மால்வியுடன் நட்பாகியுள்ளார். பின் சில முறை அவரைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் கோரியுள்ளார். ஆனால் மஹிபாலின் கோரிக்கையை மால்வி மறுத்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்தவே, சமூக ஊடகத்தில் மஹிபாலுடனான நட்பை முறித்து விலகியுள்ளார்.

இந்நிலையில், மும்பை வெர்ஸோவா பகுதியில் ஒரு காஃபி ஷாப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மால்வியை சொகுசு காரில் வந்த ஒருவர், நடிகையை வயிற்றில் ஒரு முறையும், கைகளில் இரண்டு முறையும் கத்தியால் குத்தியிருக்கிறார். அங்கிருந்து மீட்கப்பட்ட நடிகை மால்வி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச்சென்ற நபர் தயாரிப்பாளர் யோகேஷ்குமார் மகிபால் சிங் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வெர்ஸோவாகாவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் மஹிபால் நண்பரானதாகவும், இந்த வருடம் ஜனவரி மாதம் அவரைச் சந்தித்ததாகவும், மஹிபால் ஒரு பாடல் வீடியோ ஆல்பத்துக்காக தன்னை நடிக்கக் கேட்டதாகவும் மால்வி காவல்துறையிடம் கூறியதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக யோகேஷ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெர்சோவா காவல்துறையினர் தெரிவித்தனர். 

கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மால்வி சிகிச்சை பெற்று தற்போது நலமாக இருக்கிறார் எனத் 
தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here