திருப்பரங்குன்றம் ஜூன் 18-ல் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

திருப்பரங்குன்றம் ஜூன் 18-ல் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

0
458

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் வரும் 18-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
 news 12.002
ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவையொட்டி, கோயிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் விஷேச ஊஞ்சல் அமைக்கப்பட்டு, அதில் தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுடன் எழுந்தருள்வார்.

அங்கு கோயில் ஓதுவார்கள் பொன்னூஞ்சல் பாடல் பாடுவர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.  விழாவின் 10-ம் நாளான வரும் 27-ம் தேதி முப்பழ பூஜை நடைபெறும். 
news 12.003அன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால வேளையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி, சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், துர்க்கை, கற்பக விநாயகர் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் மா, பலா, வாழை ஆகிய முப்பழங்கள் கொண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்