திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இடம்பெற்ற இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்

0
150

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான என்.சீனிவாசன் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் களை நியமித்து ஆந்திர மாநில அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர் குழு தலை வராக ஒய்.வி.சுப்பா ரெட்டி நிய மிக்கப்பட்டுள்ளார். இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என்.சீனிவாசன் உட்பட 28 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் என்.சீனிவாசன், திருமலை திருப்தி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழுவில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை இரண்டு முறை உறுப்பினராக இருந்துள்ளார்.

ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில், கன்வேயர் பெல்ட் வசதி ஏற்படுத்தி, உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து, விநியோகிக்கும் இடத்துக்கு லட்டு களை கொண்டு செல்வதை எளிமைப்படுத்தினார். இதற்கான செலவை அவரே ஏற்றார். இந்த சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் தினமும் சுமார் 3 லட்சம் லட்டுகளை எளிதாக கையாள முடிந்தது. இந்த சேவை மற்றும் அவரது முயற்சியால் திருமலை கோயில் மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் லட்டுகளை கொண்டு செல்வது எளிதாக்கப் பட்டது. இந்த சேவை கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக, லட்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க, இவர் ரூ.3 கோடி செலவில், 20 அடுமனைகளைக் கொண்ட, கூடுதல் கன்வேயர் பெல்ட் வசதி களுடன் கூடிய இரு நவீன பூந்தி தயாரிப்பு கூடங்களை ஏற்படுத்த உதவினார். அது கடந்த 2010-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. அப்போதிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் 5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அவரது சிறந்த சமூக சேவை, மனிதநேய அறப்பணிகளை அங்கீகரிக்கும் வகையில், அவர் மீண்டும் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here