தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 63 மிமீ மழை பதிவாகியுள்ளது.

லட்சத்தீவு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்றெழுத்தத் தாழ்வுப் பகுதியால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 63 மிமீ மழையும், அதனைத்தொடர்ந்து வேலூரில் 40 மிமீ மழையும், கடலூரில் 26 மிமீ மழையும், சேலத்தில் 25 மிமீ மழையும், சென்னையில் 3.5 மிமீ மழையும், தர்மபுரியில் 6.0 மிமீ மழையும், பரங்கிப்பேட்டையில் 9.0 மிமீ மழையும், பாம்பனில் 5.6 மிமீ மழையும், தொண்டியில் 2.2 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 37.7 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 11.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here