திருடனாக அறிமுகமாகும் சன் ஆஃப் விஜய் சேதுபதி

0
198

அருண் குமார் இயக்கிவரும் சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவர் திருடனாக நடித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கியவர் அருண் குமார். இரண்டிலும் விஜய் சேதுபதியே நாயகன். அருண் குமாரின் மூன்றாவது படம் சிந்துபாத்திலும் நாயகன் விஜய் சேதுபதி. அவரது மகன் சூர்யா இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

விஜய் சேதுபதியும், சூர்யாவும் சின்னச் சின்ன திருட்டு வேலைகள் செய்கிறவர்களாக இதில் நடித்திருக்கிறார்கள். தென்காசியில் தொடங்கும் படம் மலேசியா, தாய்லாந்து என கடல் கடந்து போவதாக கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகி அஞ்சலி.

ஒரு எளிய மனிதன் ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எப்படி தடையாக இருக்கிறது என்பதையும், அதற்கான தீர்வையும் இந்தப் படம் சொல்கிறது என்றார் அருண் குமார். இதில் ஐரணி என்னவென்றால், எளிய மனிதனைப் பற்றிய இந்த கதையை மலேசியா, தாய்லாந்து என வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார்கள். இசைச்சேர்ப்பை யுவன் ஷங்கர் ராஜா துபாயில் நடத்தி வருகிறார்.

எளிய மனிதன் எளிய வாழ்க்கையைக்கூட தமிழ் சினிமாவில் எளிய முறையில் எடுக்கப்பட முடிவதில்லை என்பது எத்தனை எளிய உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here