போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திங்கள்கிழமை (நாளை) முதல் பேருந்துகள் இயங்காது என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : மதுரை: பேரையூர் அருகே ஆணவக்கொலை; 4 பேர் கைது

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை ஆகியவை குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே திங்கள்கிழமை (நாளை) முதல் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


இதையும் படியுங்கள் : வேலைகளைத் தேர்வு செய்வது எப்படி? நமக்குப் பிடித்த வேலைகள் எப்போது கிடைக்கும்?

இருப்பினும் நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் இன்றே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரில் 120க்கும் மேற்பட்ட நகர பேருந்துகளும், 56 புறநகர் பேருந்துகளும் இயக்கப்படாமல் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அறிவித்ததற்கு முன்னதாகவே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : 500 கோடியில் ராமாயண கதை…. சீதையாக நயன்தாரா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்