திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி‌ அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகர்கோவிலிலிருந்து திருப்பதிக்கு 15 பேருடன் டெம்போ டிராவலர் வேன் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், துவரங்குறிச்சி அருகே வேன் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப்பகுதியில் ‌நின்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்