திருச்சியில் காவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் புதன்கிழமை (மார்ச்.7) இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தஞ்சாவூர் சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் உஷா தம்பதியிரை, ஹெல்மெட் அணியாத காரணத்தினால் காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த தம்பதியினர் நிற்காமல் சென்றனர். இதையடுத்து, தன்னைக் கடந்து சென்ற அந்த இருசக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் எட்டி உதைத்தார். இதில் நிலைதடுமாறி வண்டியிலிருந்து கீழே விழுந்ததில் கர்ப்பிணிப் பெண் உஷா படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

இந்தச் சம்பவத்தையடுத்து, கர்ப்பிணி உயிரிழப்புக்குக் காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்த போராட்டக்காரர்களைப் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அதேபோன்று கர்ப்பிணி பெணி உயிரிழப்புக்குக் காரணமான காவலர் காமராஜ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், உயிரிழந்த உஷாவின் குடும்பத்துக்கு ஏழு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

உயிரிழப்புக்குக் காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வெண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், உஷாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, உஷா உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதனிடையே கர்ப்பிணி பெண் உஷாவின் மரணத்தைக் கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் உஷாவின் கணவர் ராஜா மனுத்தாக்கல் செய்தார்.

4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ்

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் நான்கு வார காலத்திற்குள் உரிய பதிலளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here